News Monday, July 25, 2016 - 12:30

Select District: 
News Items: 
Regional Description: 
ஒமேகா கொழுப்பு அமிலங்கள் என்றால் என்ன அதன் முக்கியத்தும் பற்றி இன்று பார்க்ககலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் என்பது மீன்களில் அதிகளவு காணப்படும் ஒரு நிறைவு பெறாத கொழுப்பு அமிலமாகும். நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களை ஒமேகா 3 , ஒமேகா 6, ஒமேகா 9 என மூன்று வகைகளாக பிரிக்கலாம். இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தில் பல்வேறு மருந்துவ குணங்கள் உள்ளன. இவை இரத்தத்திலுள்ள கொலஸ்டிரால் அளவை குறைக்கக் கூடியதாகும். இருதய நோய்க்கு காரணமான குறைந்த அடர்வுள்ள கொழுப்பு புரதத்தை குறைப்பதன் மூலம் உடலின் இரத்த அழுத்தத்தை குறைக்கும். ஆஸ்துமா நோயினை குறைக்கும் தன்மை இவற்றிற்கு உண்டு. இவை மேலும் மூளை மற்றும் நரம்பு திசுக்கள் வளர்ச்சியடைய உதவும். எனவே தான் மீன் உணவை அனைத்து வயதினரும் சாப்பிடலாம் என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.