News Monday, April 7, 2025 - 10:44

News Items: 
Description: 
ஆரம்பர்கிரிஷ் என்பது ஸ்பைடர் மற்றும் ஸ்பெர்ம் வகை திமிங்கலங்களின் கழிவுப் பொருட்கள் ஆகும். இவைகள் பொதுவாக கடற்கரைகளின் ஓரங்களில் அவ்வப்போது காணப்படும். மழைக்காலங்களில் இவைகள் அதிகமாக கிடைக்கும். நம்நாட்டில் குஜராத் மாநிலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் இவைகள் அதிகம் கிடைக்கிறது. இவைகள் பொதுவாக நல்ல மதிப்புடையதும் அதுமட்டும் அல்லாது விலைமதிப்பற்றதும் ஆகும். ஆனால் இவற்றிற்காக திமிங்கலங்களை வேட்டையாட தேவையில்லை. காரணம் அவ்வாறு செய்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஏனெனில் ஆம்பர்கிரிஸ் என்பது திமிங்கலங்களின் சாதாரண கழிவுப்பொருளே ஆகும். இவ்வகை கழிவுப்பொருட்கள் கடல் நீரினால் தன்மை மாறி ஆரம்பர்கிரிஷ் ஆக மாறுகின்றது. திமிங்கலங்கள் கணவாய் மற்றும் ஊசி கணவாய் போன்ற மீன்களை உட்கொள்ளும் போது கணவாய் மீன்களில் உள்ள ஓடுகள் திமிங்கலங்களின் இரைப்பையால் செறிக்க வைக்க முடிவதில்லை. எனவே இவை இறைப்பையையும், கல்லீரலையும் தொடர்ந்து உருத்துகின்றது. இதை தடுப்பதற்காக ஒரு வகையான கோழை போன்ற பொருளை கல்லீரல் உண்டாக்குகிறது. இவைகள் திமிங்கலங்களின் கழவுடன் சேர்ந்து வெளியேறுகின்றது. ஆரம்பர்கிரிஷ் திமிங்கலங்களின் உடலில் இருந்து வெளியேறும் போது மெழுகு போன்ற தன்மையுடன் வெளியேறும். இவைகள் கருப்பு கரும்பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளைநிறங்களில் காணப்படும். ஆனால் கருப்பும் மற்றும் கரும்பச்சை நிறம் உடைய ஆரம்பர்கிரிஷ் மட்டுமே அதிக அளவில் கிடைக்கிறது. இவைகள் எடை குறைவானது நீரில் கரையாது. அதுமட்டும் அல்லாது எளிதில் மிதக்கக் கூடியது. இவைகள் கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆனது.
Regional Description: 