News Monday, September 30, 2024 - 11:25

News Items: 
Description: 
கடல் உயிரிகள் பற்றி அறிவோம் கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு, தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில் இருக்கும். ஆனால் கடலில் வாழும் உயிரினங்கள் நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, ஆல்கை நோநேரியா என்பவை அதில் முக்கியமானவையாகும். கடல் உயிரி என்று சொல்லிவிட்டு தாவரங்கள் பெயரைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம். இவை அனைத்தும் கடல்வாழ் உயிரிதான். கடல் அல்லி கடல் அல்லி என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுகின்றன. பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணும்.
Regional Description: 