News Wednesday, September 25, 2024 - 11:35

Select District: 
News Items: 
Description: 
ஒரு மனிதன், 100 கிராம் மீன் சாப்பிட்டால், அதில் சுமார் 20 கிராம் வரை புரதச்சத்து கிடைக்கிறது. சுமார் 60 கிலோ எடை உள்ள நடுத்தர வயது ஆண்களுக்ககு, ஒரு நாளைக்கு 50 – 55 கிராமும், பெண்களுக்கு 40 – 45 கிராமும் உணவில் புரதச்சத்து இருக்க வேண்டும். நீங்கள் ஒரு கிலோ கடல் மீன் வாங்கி உங்கள் வீட்டில் உள்ள நான்கு பேர் சாப்பிட்டால், ஒரு நபருக்கு சுமார் 50 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது. ஆனால் புரதச்சத்து பவுடர் கடையில் வாங்கினால், அதன் செலவு மிக அதிகமாகும். இந்திய கடல் உணவு ஏற்றுமதி கழகத்தின் அறிக்கையின்படி 1995 முதல் – 2022 வரை 458348.52 கோடிகள் அளவுக்கு கடல் உணவு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது (MPEDA). கடல் தாழைகள், அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், ஆற்று கழிமுக பகுதிகள், லாகூன் (கடல் நீரும் ஆற்றும் நீரும் கலந்து உருவாகும் கடலோர ஏரிகள்) போன்றவை மீன்களை இயற்கையாக உற்பத்தி செய்து, வளர்த்து நமக்கு அளிக்கின்றன. கடலில் இயற்கை சூழல் மண்டலங்கள் நமக்கு கடல் உணவை அள்ளி தருகின்றன. இலவசமாக அவை அள்ளி கொடுப்பதால் அதன் மதிப்பு தெரிவதில்லை.
Regional Description: 