News Friday, August 16, 2024 - 11:57
Submitted by nagarcoil on Fri, 2024-08-16 11:57
Select District:
News Items:
Description:
அரோவானாஸ் மீன் பற்றி தெரிந்து கொள்வோம்: அரோவானாஸ் எனப்படும் வெப்பமண்டல நன்னீர் மீன் அமேசான் காட்டில் ஆறுகளில் காணப்படும் அழகான ஒரு வகையான மீனம் ஆகும். இந்த மீன்கள் அவற்றின் அழகு சக்தி மற்றும் தோற்றத்தின் காரணமாக உலகின் மிக விலை உயர்ந்த கவர்ச்சியான மீன்களில் ஒன்றாக கருதப்பட்டு தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. எனவே தான் இந்த அரோவானா மீன்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகின்றன. வாஸ்து ஜோதிடத்தில் சீனர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த நம்பிக்கையின் ஒரு வடிவமாக அரோவானா மீன்களை வீடு அல்லது அலுவலகத்தில் வளர்ப்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்புகின்றனர். சீன கலாச்சாரத்தில் இது ஒரு பாரம்பரிய நடைமுறையாக கருதப்படுகிறது காலம் காலமாக அரோவானாஸ் மீன்களை சீனர்கள் வீடுகளில் வளர்த்து வரக் காரணம் அரோவானா அதன் உரிமையாளருக்கு செழிப்பு அதிர்ஷ்டம் மட்டும் பாதுகாப்பை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. சீனர்களின் நம்பிக்கையான 'பெங் சுய்' என்ற வாஸ்து அடிப்படையில் அரவணா மீன் வகை மீன் வைக்கப்படும் இடம் மற்றும் அதை கவனிக்கும் விதத்தைப் பொறுத்து அது இருக்கும் இடத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் செயல்படும் என்று கருதப்படுகிறது. இந்த மீன்கள் குறித்து சீனக் கதைகள் சொல்வது என்னவென்றால் அரோவானா ஒரு அறிய மீன் இது பொருளாதார ரீதியாக செழிப்பை ஊக்குவிக்கிறது இது அதிர்ஷ்டத்தின் சக்தி வாய்ந்த சின்னம் இளஞ்சிவப்பு வெள்ளி அல்லது தங்க மஞ்சள் நிறங்களில் இருக்கும். மீன்களை வளர்க்கும் இடங்களில் அவை அதன் உரிமையாளர்களுக்கு செழிப்பைக் கொண்டு வருகிறதாம். அரோவானா மீன்களும் ஒரு தியான கருவி என்றும் அவற்றை உற்றுப் பார்ப்பது மன அழுத்தத்தை கணிசமாக குறைத்து, அமைதிபடுத்தும் என்று கூறுகின்றார்கள்.
Regional Description: