News Thursday, July 11, 2024 - 10:26
Submitted by nagarcoil on Thu, 2024-07-11 10:26
Select District:
News Items:
Description:
பூமி தோன்றிய வரலாறு-: பூமியின் வயது 500-600 கோடி ஆண்டுகளாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இப்பரந்த பூமியானது தற்போது சூரியன் என்று அழைக்கப்படும். நெருப்பு கோளத்தில் இருந்து வெடித்து சிதறிய சிறு பகுதியே ஆகும். இப்படி தோன்றிய பூமி ஒரு நெருப்பு கோளாக இருந்தது பின் அதனில் மின்புலம் வின் கற்கள், எறிகற்கள், புறஊதா கதிர்களின் தாக்கம் என பல நிகழ்வுகள் பூமியின் அமைப்பை மாற்ற துவங்கின. இறுதியாக பூமி ஓர் தட்டையான கோள அமைப்பை பெற்றது. அப்போது பூமியின் உட்புறத்தில் உள்ள நீர்க்கசிவுகள், நீர் போன்றவை நீராவியாக மாறி சூரியனையே மறைத்தது. இதனால் கதிர்வீச்சு இல்லாமல் பூமியானது குளிரத்துவங்கியது. இதனால் பூமியின் மேல்பரப்பில் பல மாற்றங்கள் உண்டானது. அதுமட்டும் இல்லாமல் பூமியின் பரப்பு சீராக இல்லாமல் பல பகுதிகள் உயர்ந்தும் பல பகுதிகள் தாழ்ந்தும் மாறி கொண்டு இருந்தது. இதனால் பூமியில் மேடுகளும் பள்ளங்களும் உண்டானது. இவ்வாறு நில மாறுபாடுகள் தொடர்ந்து கோடிக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்று பல்வேறு கட்டங்களை கடந்தன. பூமிகோளத்தின் வெப்பநிலை தொடர்ந்து குளிர்ந்து கொண்டே சென்றதாலும் மேலே சென்று நீராவி தொடர்ந்து அதிகரித்ததாலும், காற்றினால் மேகங்கள் அலைக்கழிக்கப்பட்டு பின் குளிர்ந்து மழையாக பெய்ய துவங்கியது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பெய்த பயங்கரமான மழையின் முடிவில் பள்ளங்கள் நிறைந்து பெருங்கடல்களாகவும் உயர்ந்த பரப்புகள் கண்டங்களாகவும், மலைகளாகவும் மாறியது.
Regional Description: