News Tuesday, March 14, 2017 - 05:48
Submitted by pondi on Tue, 2017-03-14 05:48
Select District:
News Items:
Description:
Flamingo birds thousand km in 4 to 8 days The first two km The building has a special distance. These birds annually, Gujarat, Orissa and East and Central Asian countries to the south, the state used to come to the migration. August is winter in the northern portions of the world begins to catch up to her mother, unable kulirait uniform climatic conditions, in search of prey Migratory birds come and go in search Flamingo. When it comes to the state of birds annually, and thousands of birds Flamingo piramavatta maturaiyaik barrage across the lakes, the sea areas to help. They rested for a few days to track the business wishes valacaip Madurai district has so far. But, this year, more than one hundred abnormally Flamingo birds do not go anywhere else avaniyapuram Madurai, vantiyur, camanattam, Thirupparankundram 3 months and rely on flood barrage.
Regional Description:
வடஇந்தியா, கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வலசை (Bird migration) வந்த பிளமிங்கோ பறவைகள், வர்தா புயலால் நடப்பாண்டு வழக்கத்துக்கு மாறாக கடற்பகுதி களில் தங்குவதைத் தவிர்த்து, நிலப்பரப்புக்கு அதிகளவில் அபூர்வமாக இடம்பெயர்ந்து வந்துள்ளன. பிளமிங்கோ பறவைகள் 4 முதல் 8 நாட்களில் ஆயிரம் கி.மீ. முதல் இரண்டாயிரம் கி.மீ. தூரத்தை கடக்கும் சிறப்பு கொண்டவை. இந்த பறவைகள் ஆண்டுதோறும் குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு, மத்திய ஆசிய நாடுகளில் இருந்து தென்னிந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் வலசை வருவது வழக்கம். உலகின் வட பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் பனிக்காலம் தொடங்கியதும் குளிரைத் தாக்கு பிடிக்க முடியாமல் சீரான தட்பவெப்ப நிலையைத் தேடியும், இரை தேடியும் பிளமிங்கோ பறவைகள் வலசை வந்து செல்கின்றன. ஆண்டுதோறும் தமிழகத்துக்கு பறவைகள் வரும்போது, ஆயிரக்கணக்கில் பிளமிங்கோ பறவைகளும் மதுரையைக் கடந்து பிறமாவட்ட கண்மாய்கள், ஏரிகள், கடல் பகுதிகளுக்கு செல்லும். இந்த பறவைகளின் வலசைப் பாதையில் ஒருசில நாள் ஓய்வெடுத்து செல்லும் இடமாகவே இதுவரை மதுரை மாவட்டம் இருந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு, வழக்கத்துக்கு மாறாக நூற்றுக்கும் மேற்பட்ட பிளமிங்கோ பறவைகள் வேறு எங்கும் செல்லாமல் மதுரை அவனியாபுரம், வண்டியூர், சாமநத்தம், திருப்பரங்குன்றம் மற்றும் வெள்ளக்கல் கண்மாய்களில் 3 மாதங்களாக தங்கியிருக்கின்றன.