News Wednesday, November 15, 2023 - 18:09
Submitted by pondi on Wed, 2023-11-15 18:09
Select District:
News Items:
Description:
வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 13 கி.மீ. வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 470 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவில் இருந்து 620 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 9381442312 என்ற மீனவ உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது FFMA என்ற மீனவ நண்பன் செயலி ஆப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.நன்றி....
Regional Description: