News Tuesday, July 25, 2023 - 13:47

News Items: 
Description: 
மீனவர்களுக்கு ஓர் அறிவிப்பு: தட்டுமடியின் சிறிய கண்ணிகளை பயன்படுத்தி சிறிய வகை மீன்களை பிடிக்க வேண்டாம் என குளச்சல் மீன்வள துறை தெரிவித்துள்ளது. தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதலமாகக் கொண்டு மீன்பிடி தொழில் புரியும் நாட்டுப்படகு மீனவர்கள் தமிழ்நாடு கடல் மீன்பிடித்தலை ஒழுங்குமுறை படுத்தும் சட்டம்-1983 மற்றும் திருத்த விதிகள்-2020 மீறி தட்டுமடி வலையின் சிறிய கண்ணிகளை பயன்படுத்தி சிறிய வகை மீனினங்களை பிடித்து வருவதாக இவ்வலுவலக கள ஆய்வில் தெரிய வருகிறது. சிறிய கண்ணிகளை பயன்படுத்தி சிறிய வகை மீன் இனங்களை பிடித்தல் குற்றமாகும். கடலின் மீன் வளமும் பாதிக்கப்படும், ஆகவே மேற்படி தட்டுமடி வலையின் சிறிய கன்னிகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடித்தல் ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்த விதிகள் 2020-ன் படி நடவடிக்கை எடுப்பதுடன் மானிய மண்ணெனை வழங்குவதும் முற்றிலும் ரத்து செய்யப்படும். என்ற விவரம் மீனவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Regional Description: 