News Thursday, July 13, 2023 - 10:13
Submitted by pondi on Thu, 2023-07-13 10:13
Select District:
News Items:
Description:
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளம், கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனமான சிஃப்நெட் சென்னை, கொச்சின், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கப்பல் வழிகாட்டி படிப்பு (Vessel Navigator Course), கடல்சார் பிட்டர் படிப்பு (Marine Fitter Course) படிப்புகளை வழங்குகிறது. மூன்று வளாகங்களிலும் சேர்த்து மொத்தம் 120 இடங்கள் உள்ளன. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் தோறும் ரூபாய்.1500/- உதவித்தொகை வழங்கப்படும். மேற்கண்ட படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டின் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேட்டை சிஃப்நெட் நிறுவனத்தின் இணையதளத்தில் (www.cifnet.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்துடன் ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என சிஃப்நெட் நிறுவனம் அறிவித்துள்ளது
Regional Description: