News Sunday, July 17, 2016 - 06:32

Select District: 
News Items: 
Description: 
Climate Studies of the Central Government Rs. To allocate 980 million, the federal government prior to the 2004 tsunami on terivittullatuintiya, landslides, tidal, to pursue studies more concerned about the devastating earthquake was celuttappatamaleye. In 2007, realizing the importance of such studies, the technology of detecting insertion of a tsunami. Globally, India ranks 2nd in job-tech tsunami. Japan is at the top. Such research institute in Hyderabad and the Central Government has been implementing better. By detecting changes in weather radar signal analysis is carried forward. They know the rainy season, the climate is greatly helpful to know. Therefore, the Central Government for such research Rs. Is offering 980 million. Earthquake vibrations aiaiji company is also doing well in carrying out the research
Regional Description: 
பருவநிலை குறித்த ஆய்வுகளுக்கு மத்திய அரசு ரூ. 980 கோடி ஒதுக்கியிருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் 2004ஆம் ஆண்டுக்கு முன்னதாக சுனாமி குறித்தும், ஆழிப் பேரலை, பேரழிவு பூகம்பம் குறித்தும் ஆய்வுகள் முன்னெடுத்துச் செல்வதில் அதிகம் அக்கறை செலுத்தப்படாமலேயே இருந்தது. 2007 இல் இத்தகைய ஆய்வுகளின் அவசியத்தை உணர்ந்து சுனாமி குறித்தும் அறியும் தொழில்நுட்பத்தை புகுத்தியது. உலகளவில் இந்திய தொழில்நுட்பம்தான் சுனாமி குறித்து அறியும் முறையில் 2ஆவது இடத்தை வகிக்கிறது. முதலிடத்தில் ஜப்பான் உள்ளது. இந்தியத் தொழில்நுட்ப முறையானது பூமிக்கடியில் நிகழும் அதிர்வுகளை கண்டுணர்ந்து 13 நிமிடங்களில் விண்ணில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு கொண்டு சென்று அங்கிருந்து முழுமையான தகவல்களைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதில் உள்ள மத்திய அரசு நிறுவனம் இத்தகைய ஆய்வுகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ரேடார் சிக்னல் மூலம் பருவநிலை மாற்றங்களைக் கண்டறியும் ஆய்வுகளும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இவை இந்தியாவின் மழைக் காலங்களை அறியவும், தட்பவெப்ப நிலைகளை அறியவும் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. எனவே, இத்தகைய ஆராய்ச்சிகளுக்காக மட்டும் மத்திய அரசு ரூ. 980 கோடி வழங்கி வருகிறது. பூகம்ப அதிர்வுகள் குறித்த ஆய்வுகளை முன்னெடுப்பதில் ஐஐஜி நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.