News Wednesday, March 8, 2023 - 09:15
Submitted by nagapattinam on Wed, 2023-03-08 09:15
Select District:
News Items:
Description:
உலகளவில் மீன் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவாக திகழ்கிறது. தற்பொழுது பிடிக்கப்படும் கடல் மீன்கள் நம் உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. ஆகவே பிடிக்கப்படுகின்ற மீன், இறால், கணவாய் மற்றும் சிங்கிறால் உள்ளிட்ட அனைத்து கடல் உணவுப்பொருட்களும் பிடித்த இடத்திலிந்து நுகர்வோர்களை சென்றடையும் வரை சுத்தமாகவும், நுண்ணுயிரி தாக்காதவாறும், ஊட்டச்சத்தில் குறைவு ஏற்படாத வகையிலும் கொண்டு செல்வது மிக மிக அவசியமாகின்றது. மேலும் அதிகப்படியான மீன்கள் கிடைக்கும் போது அதனை நவீன தொழில்நுட்ப முறையில் பதப்படுத்தி நீண்டகாலத்திற்கு கெடாமல் பாதுகாத்தல் என்பதும் முக்கியமான ஒன்றாகும். மீன்களை கெடாமல் பாதுகாப்பதற்கும், பதப்படுத்துவதற்கும் உலர வைத்தல், உப்பிடுதல், உறைய வைத்தல், புகைபதனம் செய்தல் மற்றும் டின்களில் அடைத்தல் என பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன.
Regional Description: