News Friday, December 16, 2022 - 10:36

Select District: 
News Items: 
Description: 
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும். அதே பலத்துடன் வரும் 17-ம் தேதி தெற்கு வங்கக் கடலில் நிலைபெறும். தொடர்ந்து இலங்கை அருகே சென்று, பின்னர் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. தற்போது தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு (டிச. 16, 17, 18) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19-ம் தேதி சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய , லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
Regional Description: 