News Thursday, December 8, 2022 - 11:34
Submitted by nagapattinam on Thu, 2022-12-08 11:34
Select District:
News Items:
Description:
தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. 8ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9-ம் தேதி 15 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோரத்தில், இன்றும், நாளையும், மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் வேகத்தில் பலத்த காற்று வீசும். பின், காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, அதிகபட்சம், 80 கி.மீ., வேகம் வரை வீச வாய்ப்புள்ளது. மீனவர்களை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் இலங்கையின் வடக்கு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு, இன்று முதல், 10ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்
Regional Description: