News Monday, December 5, 2022 - 10:16

Select District: 
News Items: 
Description: 
தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகில், இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக - ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும். டிச., 8ல் தமிழக வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்தில் மையம் கொள்ளும். இதன் காரணமாக, கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்,நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில், நாளை மறுதினம் கன மழை பெய்யும். அதேபோல் விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 8ம் தேதி மிக கன மழை பெய்யும்.. மீனவர்களுக்கு தடை அந்தமான், தென் கிழக்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நாளையும்; தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் நாளை மறுநாளும், மணிக்கு 70 கி.மீ., வரை சூறாவளி வீசும். அதேபோல், மன்னார் வளைகுடா, தமிழக - ஆந்திர ககடலோரப் பகுதிகளில், 7, 8ம் தேதிகளில் சூறாவளி வீசும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Regional Description: 