News Friday, December 2, 2022 - 10:36

Select District: 
News Items: 
Description: 
மீசோபெலஜிக் மண்டலங்கள் எனப்படும் கடலின் நடுத்தர பகுதிகள் சுமார் 200 முதல் 1,000 மீட்டர் ஆழம் உள்ள பகுதிகள் காலநிலை மாற்றத்தால் கணிசமான அளவு ஆக்ஸிஜனை இழக்கும் முதல் மண்டலங்களாக இருக்கும், என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில், மீசோபெலாஜிக் மண்டலம் உலகின் வணிகரீதியாக மீன்பிடிக்கும் பல இனங்களுக்கு தாயகமாக உள்ளது. இந்த பகுதிகளில் உயரும் வெப்பநிலை, குறைந்த ஆக்ஸிஜனை வைத்திருக்கக்கூடிய வெப்பமான நீருக்கு வழிவகுக்கிறது. இதனால் 2080 ல் உலகின் 70% பெருங்கடல்கள் காலநிலை மாற்றத்தின் விளைவாக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடல்வாழ் உயிரினளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படக்கூடும். இது உலகளவில் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எனவே நாம் இனிவரும் காலங்களில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைத்தால் மட்டுமே கடல் சூழல்களின் சீரழிவை தடுக்க உதவும்.
Regional Description: 