News Tuesday, July 19, 2022 - 11:13
Submitted by nagarcoil on Tue, 2022-07-19 11:13
Select District:
News Items:
Description:
நண்பன் : நம்ம ஊரில் வாங்கும் கடல் மீனுக்கும், குளத்து மீனுக்கும் அப்படியென்ன வித்தியாசம் இருக்கு ..... மீனவன் :பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. சத்து எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும் . ஆனால் குளம் என்று சொல்லி, பண்ணையில் வளர்க்கப்படும் மீனை, மக்கள் பெரிதாக விரும்புவதில்லை. பண்ணையில் வளர்க்கப்படும் மீன் சாப்பிடுவதற்கு சக்கை போன்று இருக்கும். கடல் மீனை விட ருசி குறைவாக இருக்கும். கடல் மீனில் முள் கொஞ்சம் பெரிதாக இருக்கும். சாப்பிடும் போது எளிதாக, அதனை மட்டும் தனியாக எடுத்துவிட்டு சாப்பிடலாம். குளத்து மீனில் முள் சிறியதாக இருப்பதால், பார்த்து பார்த்து நிதானமாக சாப்பிட வேண்டும். உப்பு நீரில் வளர்வதால், கடல் மீனின் உடலில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதே போல கால்சியமும் அதிகமாக இருக்கும். கடல் மீன்கள், சிப்பி, இறால், கடல் பாசிகள் போன்றவற்றை உண்டு வாழ்வதால், இதயம் மற்றும் மூளைக்கு நன்மை தரும் ஒமேகா 3 அதிகமாக உள்ளது. கடல்மீனிலும் சரி, குளத்து மீனிலும் சரி உடலுக்கு தேவையான அடிப்படை சத்துகள் நிறைந்தே உள்ளது. நண்பன் & மீனவன் : ஆத்து மீனோ, குளத்து மீனோ அல்லது கடல் மீனோ எதுவாக இருந்தாலும், இரசாயன பதப்படுத்துதல் இன்றி சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது. என்ன நண்பர்களே இன்னைக்கு நம்ம வீட்டுல மீன் குழம்பு தான ...
Regional Description: