News Friday, July 15, 2022 - 08:08

Select District: 
News Items: 
Description: 
மன்னார் வளைகுடாவின் சிறப்பம்சங்கள்: மன்னர் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 21 சிறிய தீவுகளையும், மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகளை உள்ளடக்கிய பகுதி. தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 1 முதல் 10கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா தூத்துக்குடியில் இருந்து தனுஷ் கோடி வரையிலான கடற்பகுதியில் 160 கி.மீ நீளத்திற்கு பரந்துள்ளது. இந்த மன்னார் வளைகுடா கிழக்கு கடற்கரை பகுதியில் 10,500 ச.கி.மீ பரப்பளவை கொண்டது. இந்த பகுதியில் 3600 க்கும் மேற்பட்ட நீர் வாழ் தாவர மற்றும் விலங்கு உயிரினங்கள் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலகில் முதல் கடல் ஆய்வுகூடம் 1850 ஆம் ஆண்டு குருசடை தீவில் நிறுவப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவிலேயே உலக உயிர் கோள் மையமாக அறிவிக்கப்பட்ட முதல் கடல் பகுதி மன்னார் வளைகுடா தான். இப்பகுதியில் இந்தியாவிலேயே அதிக முத்துக்கவளம் உள்ள முத்து நகரமான தூத்துக்குடி உள்ளது.
Regional Description: 