News Wednesday, July 6, 2022 - 10:38
Submitted by rameswaram on Wed, 2022-07-06 10:38
Select District:
News Items:
Description:
மாணவன் : கடல் நீர் இப்படி உப்பு கரிக்குதே. ஆனா, கடல் நீரில் வாழும் மீனைச் சாப்பிடுறப்ப மட்டும் உப்பு கரிப்பதில்லையே. இது எப்படி? ஆசிரியர் : உப்பு நிறைந்த கடல் நீரில மீன்கள் வசித்தாலும், அந்த உப்போட தாக்கம் அவற்றின் உடலுக்குள்ள செல்லாதபடி தடுக்கும் தகவமைப்பு மீன்கள் கிட்ட இருக்கு. மனுஷங்க உள்ளிட்ட பாலூட்டிகள் நுரையீரலால் சுவாசிக்கிறோம். ஆனால், மீன்கள் செவுள்களால் சுவாசிக்கும். அதாவது மீன்கள் வாயால் நீரை உறிஞ்சிட்டு, செவுள்கள் வழியாக வெளியேற்றும். அப்போது செவுள் பகுதியில் இருக்குற ஏராளமான நாளங்கள் நீரினுள் கரைந்திருக்கிற ஆக்சிஜனை மட்டும் உறிஞ்சி உடலுக்குள்ள அனுப்பும். நீரில் கரைந்திருக்கும் உப்பு உள்பட மற்ற அனைத்தும் நீரோட சேர்ந்து கழிவுகளா வெளியே வந்துடும்.அதேபோலத்தான் உண்ணும் உணவுப் பொருட் கள்ல உப்பு இருந்தாலும், தேவைக்கு அதிகமாக இருக்குற உப்பை கழிவா வெளியேற்றும் பணியை உணவு மண்டலம் செய்கிறது. ஆகவே, உப்பு நிறைந்த தண்ணிக்குள்ள வசித்தாலும், அந்த உப்பு மீன்களோட உடலுக்கு செல்லாமல் தடுக்கும் தகவமைப்பு உள்ள தால மீன்களின் சதைப் பகுதியை நாம சாப்பிடுறப்ப உப்பு கரிக்கிறதில்ல” என்று விளக்கமளித்தார். என்ன மாணவர்களே இன்றைய செய்தி தெரிஞ்சிகிட்டீங்களா.....
Regional Description: