News Tuesday, June 28, 2022 - 09:23
Submitted by nagarcoil on Tue, 2022-06-28 09:23
Select District:
News Items:
Description:
சிறிய மின்னணுக் கருவிகள் அதிகம் வரத் துவங்கியுள்ளன. இதனால், அவற்றுக்கு மின்சக்தியைத் தரவும் புது வழி தேவை, பிரிட்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நீலப் பச்சை பாசி மற்றும் சூரிய ஒளியை வைத்து மின் உற்பத்தி செய்யும் கருவியை உருவாக்கியுள்ளனர். இதிலிருந்து கிடைத்த மின்சாரத்தை வைத்து, ஒரு ஆண்டுக்கு ஒரு கணினியின் சில்லினை இயக்கியுள்ளனர். மின்கலன் அளவேயுள்ள ஒரு பெட்டியில் நீரை ஊற்றி, அதில் பாசியை ஆராய்ச்சியாளர்கள் மிதக்கவிட்டனர். ஒரு பகுதியில் கண்ணாடி வழியே சூரிய ஒளி பாசி மீது பட்டது. இதன் வாயிலாக நடக்கும் ஒளிச்சேர்க்கையோடு, எலெக்ட்ரான்களும் உற்பத்தியாகும். அதை, ஒரு அலுமினிய மின் முனை வழியே மின் கலனுக்கு அனுப்பி சேகரித்தனர். இந்த சிறிதளவு மின்சாரத்தை வைத்து, ஆர்ம் கார்டெக்ஸ் என்ற சிலிக்கன் சில்லினை இயக்கிக் காட்டினர் விஞ்ஞானிகள். இணையத் தோடு இணைந்து செயல்படும் சிறு கருவிகளை இயக்க, இத்தகைய கண்டுபிடிப்புகள் உதவும்.
Regional Description: