News Wednesday, June 22, 2022 - 11:55
Submitted by nagarcoil on Wed, 2022-06-22 11:55
Select District:
News Items:
Description:
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்புபவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள பக்கத்தில் வருகிற ஜூலை 7ம் தேதி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க முடியாமல் இருக்கும் மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க தகுந்த வழிவகை செய்துள்ளதாகவும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. அப்படி இணையதள மூலம் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai – 6” என்ற பெயரில் வருகிற 27ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் வங்கி காசோலை மூலம் அல்லது நேரடியாகவும் வந்து செலுத்தலாம். மேலும், இது குறித்த விபரங்களுக்கு 044 – 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Regional Description: