News Wednesday, June 8, 2022 - 13:38

Select District: 
News Items: 
Description: 
உலகப் பெருங்கடல்கள் தினம், ஜூன் 8, 2022 அன்று, புத்துயிர் பெறுதல்: பெருங்கடலுக்கான கூட்டு நடவடிக்கை என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்துகிறது. உலகம் இயங்குவதற்கு கடல்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. இயற்கையின் நுரையீரலில் பசுமையை குறிப்பிடும் வனங்கள் ஒரு பக்கம் என்றால், நீலத்தை குறிப்பிடும் கடல்களும், கடல்வாழ் உயிரினங்களும் மறுபக்கமாக உள்ளது. சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் கடல்களின் பாதுகாப்பை குறிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பூமியின் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கடல்களின் பங்கு அளவிட முடியாது. எனவே நாம் கடலுடன் ஒரு புதிய சமநிலையை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அதே சமயம் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்து புத்துயிர் பெறுவதற்கு நாம் ஒன்றிணைந்து புதிய கொள்கைகளை செயல்படுத்த வேண்டும். கடந்த சில காலங்களாகவே கடல்களில் சரக்கு கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள் மற்றும் மனிதர்களால் உருவான கழிவுகளும், குப்பைகளும், நெகிழிகளும் கடலில் கலந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் கடல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால், கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பதுடன் அவைகள் பல தீங்குகளை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த உலக பெருங்கடல் தினத்தில் கடல்களை தூய்மையாக வைத்துக்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்போம்.
Regional Description: 