News Tuesday, May 10, 2022 - 11:22

News Items: 
Description: 
வங்க கடலில் புதியதாக உருவாகியுள்ள புயலுக்கு அசானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயர் இலங்கையால் அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சிங்கள மொழியில் அசானி என்பதற்கு பெருஞ்சினம், என்று பொருள். புயல்களுக்க் ஏன் பெயர் சூட்டப்படுகிறது என்பதற்கு உலக வானிலை அமைப்பு கொடுத்துள்ள விளக்கம் என்னவென்றால் பூமியின் எந்தவொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடும். அந்த புயல்களை வேறுபடுத்திக் காண்பித்து குழப்பத்தை தவிர்க்கவும், பேரிடர் அபாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டப்படுகிறது. புயல்களுக்கு சிறிய மற்றும் அழைப்பதற்கு எளிமையாக உள்ள பெயர்கள் சூட்டப்படுகின்றன. இதுபோல் பெயர் சூட்டுவது நூற்றுக்கணக்கான நிலையங்கள், கடலோர தளங்கள் மற்றும் கப்பல்களுக்கு விரைந்தும், திறம்படவும் புயல் குறித்த தகவல்களை அனுப்ப உதவுகிறது. புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியவர் பிரிட்டனை சேர்ந்த வானியல் விஞ்ஞானி கிளைமெண்ட் ராக் (1852 – 1922) என்பவர், இவர் முதலில் பிரிட்டனிலும் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வானிலையை அளவிடுவதற்கான கருவிகளை தனிப்பட்ட முறையில் அமைத்து ஆய்வு செய்து வந்தார். முதலில் கிரேக்க எழுத்துக்களைக் கொண்ட பெயர்களையும் , கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயர்களையும் புயல்களுக்கு சூட்ட அவர் முடிவு செய்தார். பின்னர், புயல்களின் பெயர்கள் வரிசையில் அவருக்கு பிடிக்காத ஆஸ்திரேலிய பிரதர்மர்களின் பெயர்களும் இடம் பிடித்தன. ஒரு முறை சூட்டப்படும் பெயர் மீண்டும் பயன்படுத்தப்படாது. புயல்களுக்கான பெயர்கள் அதிகபட்சம் 8 எழுத்துக்களை கொண்டிருக்கலாம். அந்தப் பெயர் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், எந்தவொரு இனத்தை சேர்ந்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாகவும் இருக்க கூடாது. கடந்த 2020 ஆம் ஆண்டு புயல்களுக்குச் சூட்ட 13 நாடுகள் வழங்கிய 169 பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாடும் 13 பெயர்களை அளித்தன, அதில், இந்திய சார்பில் அளிக்கப்பட்ட பெயர்களில் கதி, மேக், ஆகாஷ் ஆகிய பெயர்கள் பயன்படுத்தபட்டுள்ளன. உலக அளவில் 6 சிறப்பு பிராந்திய வானிலை மையங்கள் உள்ளன. அவற்றில் இந்திய வானிலை மையமும் ஒன்று. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல் மணிக்கு 62 கி.மீ அல்லது அதற்கு அதிகமான வேகத்தை எட்டும்போது. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டியுள்ள 13 நாடுகளுக்கு புயல் குறித்த ஆலோசனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிறது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. அகர வரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயர்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது அவை பாலினம், அரசியல், மத நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். தற்போது உருவாகியுள்ள அசானி புயலைத் தொடர்ந்து அடுத்து உருவாகும் புதிய புயலுக்கு சித்ரங் எனப் பெயரிடப்படவுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அளித்துள்ள குர்மி, பிரவாஹோ, ஜார், முரசு போன்ற பெயர்களும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ளன. நன்றி : தினமணி
Regional Description: 