News Monday, July 11, 2016 - 16:50

Select District: 
News Items: 
Regional Description: 
செ.வெ.எண்:17ஃஜூலை நாள்:09.07.2016 இராமநாதபுரம் மாவட்டம் நகராட்சிப் பகுதிகளில் ‘பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டம்”-ன் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.நடராஜன் இ.ஆ.ப., அவர்கள் தகவல். இராமநாதபுரம் மாவட்டம், நகர்ப்புற மேம்பாட்டிற்காக மாவட்ட அளவிலான ஏழை மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மத்திய அரசால் அனைவருக்கும் வீட்டு வசதி வழங்கும் பொருட்டு ‘பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டம்” நகராட்சியில் செயல்படுத்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கூறிய திட்டத்தின் 4 உட்கூறுகளில் ஒன்றான ‘கடனுடன் இணைக்கப்பட்ட மான்ய திட்டம”; (ஊசநனவை டுiமெநன ளுரடிளனைல ளுஉhநஅந) அடிப்படையில் வீடு வழங்கும் திட்டம் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 இலட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ள பிரிவினருக்கு 6.5மூக்கு மேற்படும் வட்டிக்கு மான்யத்துடன் அதிகப்படியாக 30 ச.மீ (323 ச.அ) பரப்பளவு கொண்ட நுறுளு வீடும் 3 முதல் 6 இலட்சம் வரை வருவாய் உள்ள பிரிவினருக்கு 6.5மூக்கு மேற்படும் வட்டிக்கு மான்யத்துடன் அதிகபட்சம் 60 ச.மீ (646 ச.அ) பரப்பளவு கொண்ட டுஐபு வீடு வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில்வாழும் தகுதியுள்ளவர்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு உரிய படிவத்தில் குறிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராமநாதபுரம்.