News Tuesday, April 5, 2022 - 11:51
Submitted by pondi on Tue, 2022-04-05 11:51
Select District:
News Items:
Description:
கடல் உணவு வகைகளான நண்டு, மீன், இறால் போன்றவை அசைவ உணவு பிரியர்களின் மிக விருப்பமான ஐட்டங்களாகும். குறைந்த அளவு கொழுப்பும், அதிக அளவு புரதச்சத்தும் உள்ள கடல் உணவு வகைகள் ஆரோக்கியமான உணவின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கின்றன. உடல் தசைகளின் உறுதிக்கும், உடலின் கொலஸ்டிரால் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வதற்கும், இதய நோய்கள் வராமல் தடுப்பதற்கும் ,தலைமுடி வளர்ச்சிக்கும் மீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம். ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறிகளை விட கடல் உணவு வகைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகும். கடல் மீன் உணவில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் உடலுக்கு மிகவும் அவசியமானதாக டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. மீன் உணவில் இது இயற்கையாகவே உள்ளது. ரத்த அழுத்தத்தை சமன் செய்வதற்கும், மாரடைப்பு வராமல் தடுப்பதற்கும் இது உதவுகிறது. நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி இந்த ஆசிட் சிலவகை புற்றுநோய்களை தடுக்கிறது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் டி செலனியம், அயோடின் மற்றும் சில தாதுப்பொருட்களும் கடல் மீனில் உள்ளன.
Regional Description: