News Thursday, February 10, 2022 - 15:11

Select District: 
News Items: 
Description: 
அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: நடப்பு 2021-2022ம் கல்வி ஆண்டில் பள்ளியில் படிக்கும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 10ம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடப்பதால், அந்த தேதியில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் திருப்புதல் தேர்வு 17ம் தேதி நடத்த ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேதி மாற்றம் குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
Regional Description: 