News Friday, December 31, 2021 - 15:08

News Items: 
Description: 
தேசிய அளவில் 10 லட்சம் டன் மீன் பிடித்து 2020 - 21ல் நாட்டில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்கும் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2.64 லட்சம் டன் மீன் பிடித்து மூன்றாவது ஆண்டாக தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவில் மீன்பிடி தொழில் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,600 விசைப்படகுகள், 5,000த்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடிக்கின்றனர். 40 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் இத்தொழிலை நம்பி வாழ்கின்றனர். 2018ல், தமிழகத்தில் 7.18 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1.45 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு தமிழகத்தில் முதலிடம் பெற்றது. பின், 2019ல் 7.75 லட்சம் டன் மீன்பிடித்து தமிழகம் முதலிடம் பெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.10 லட்சம் டன் பிடித்து தமிழகத்தில் முதலிடம் பெற்றது. 2020 -- 21 ஆண்டிலும் 10 லட்சம் டன் மீன் பிடித்து தேசிய அளவில் தமிழகம் முதலிடத்திலும், ராமநாதபுரம் மாவட்டம், 2.64 லட்சம் டன் மீன் பிடித்து தமிழகத்தில் முதலிடத்திலும் உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரம், தமிழகத்தில் கடல் இறால் வளர்ப்பில் 2,688 டன் மீன்களும், உள்நாட்டு நன்னீர் வளர்ப்பில் 800 டன் மீன்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு மீன் உற்பத்தியில் ஆந்திரா முன்னிலையில் உள்ளது.
Regional Description: 