News Monday, December 27, 2021 - 12:20
Submitted by gujarat on Mon, 2021-12-27 12:20
Select District:
News Items:
Description:
உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தேவை அதிகம் உள்ளதாலேயே அதன் உற்பத்தி விகிதமும் அதிகமாக உள்ளது. இதுவே சுற்றுச்சூழலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது, குறிப்பாக கடலில் கலக்கும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து வெளிப்படும் பிஸ்பினால் - A, எத்தினி லேசற்றோடியோல் - 17 A போன்ற இரசாயனங்கள் மீன்களின் நாளமில்லா சுரப்பியை சீர்குலைப்பது மட்டும் இல்லாமல் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் என்பதை கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே நாம் தொலைநோக்கு பார்வையுடன் புதிய தொழில்நுட்ப உதவியுடன் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்த முயற்சித்தால் மட்டுமே கடல்வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து தடுக்க முடியும்.
Regional Description:

கடல் ஆமைகள் கடலில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பயணம் செய்யும் ஆற்றலை பெற்ற கடல் ஆமைகள், தங்கள் இன வளர்ச்சிக்கு கடற்கரையை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. கடலாமைகள் வளர்ந்து பெரிதானாலும் கூட அதன் பிறந்த இடத்தை மறப்பதில்லை. இனப்பெருக்கத்திற்கு தயாரான ஒரு பெண் ஆமை மீண்டும் தான் பிறந்த அதே கடற்கரை பரப்பிற்க்கு வந்து தான் முட்டையிடுகிறது. பிறப்பிடத்தை மறவாத பெண் ஆமைகளுக்கு கடற்கரையில் இருப்பிடம் தரவேண்டாமா !!!

காலநிலை மாற்றத்தின் விலைவாக மீன் வளர்ப்பு மற்றும் அவற்றை உண்பதற்குப் பயன்படுத்தப்படும் உணவின் இருப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக சால்மன் போன்ற அதிக மீன்களை உற்பத்தி செய்யும் பகுதிகளில், மீன் மற்றும் மீன் எண்ணெய் வழங்கல் குறைவாக உள்ளது. தற்போதைய கார்பன் உமிழ்வு விதிதங்களின் கீழ், உலகளவில் சால்மன் போன்ற மீன் வளர்ப்பு 2050 ஆம் ஆண்டில் மூன்று சதவிகிதம் மற்றும் 2090 ஆம் ஆண்டில் 14 சதவிதம் குறையும் என்றும் 2050 ஆம் ஆண்டளவில் மட்டி வளர்ப்பு அதிகரிக்கும் என்று கடல் ஆராட்சியாளர்கள் கணித்துள்ளனர். அதே சமயம் காலநிலை மாற்றம் நம் முன்னர் கருத்தில் கொள்ளாத கடல் உணவு விவசாயத்தின் அம்சங்கள் உட்பட அனைத்தையும் பாதிக்கிறது. எனவே நமது கடல் உணவு உற்பத்தி பிரச்சனைகளை தீர்க்க ஒரே தீர்வை நம்பாமல், காலநிலை மாற்றத்தைத் தணிக்க நாம் விரைவாக செயல்பட வேண்டும்.