News Sunday, July 10, 2016 - 07:45

Select District: 
News Items: 
Description: 
Southwest monsoon from June to September is the month. Coastal Karnataka and Kerala in the south-west monsoon in the Western Ghats mountain ataintullatutamilakat currently active in tribal areas is raining. At this stage in the Nilgiris and Coimbatore districts today (Sunday) that there is a chance of rain peyvat Meteorological Center said. For the next 24 hours due to the potential for convection thunderstorms and rain in a few places. Heavy rain is likely to peyvat Nilgiris and Coimbatore. As for Chennai in the evening or at night thunderstorm Rain is the environment. At sea, the wind blows at a speed of 45 kilometers and 55 kilometers. So be careful of those fishing on the high seas. Being strongly taraikkarru katalkarru could not come inside. Itankaranamakave is less than the impact of the sun. Taraikkarru losing strength, katalkarru accomplish in the sun to reduce the impact.
Regional Description: 
தென்மேற்கு பருவமழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை ஆகும். கடலோர கர்நாடகம் மற்றும் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சூழல் உள்ளது. கடல் காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தரைக்காற்று வலுவாக இருப்பதால் கடல்காற்று உள்ளே வர முடியவில்லை. இதன்காரணமாகவே வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் இருக்கிறது. தரைக்காற்று வலு இழந்து, கடல்காற்று உள்ளே வந்தால்தான் வெயிலின் தாக்கம் குறையும்.