News Friday, July 8, 2016 - 10:26

Select District: 
News Items: 
Description: 
Voters have the task of verifying the origin of detail - in the state, voter lists will optimize mission, launched in May. Accordingly, all eligible voters to be added to the list; To eliminate mistakes. The voter's name, if you want to remove one or more locations; Metastasized Chen, wanted to remove the name of the deceased; Photo should be obvious; Name, surname detail, the address must be exactly that, advised. However, the use of modern technology, the voters of the same name, are separated apart. So far, 70 lakh voters divided. Their father's name, a photo and mapped. Then, only the person's name, confirmed by many others, and they are listed separately detail. Likewise, the address of the variable-goers, made the list of the dead. The list, ottuccavati staff, coming on the 15th delivery
Regional Description: 
வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம் - தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தவறுகளை களைய வேண்டும். ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் நீக்க வேண்டும்; இடம் மாறி சென்றவர், இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்; புகைப்படம் தெளிவானதாக இருக்க வேண்டும்; பெயர், குடும்ப விபரம், முகவரி சரியாக இருக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே பெயரில் உள்ள வாக்காளர்கள், தனியே பிரிக்கப்படுகின்றனர். இதுவரை, 70 லட்சம் வாக்காளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தந்தை பெயர், புகைப்படம் ஆகியவை ஒப்பிடப்படுகிறது. அப்போது, ஒரே நபரின் பெயர், பல இடங்களில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் விபரம் தனியே பட்டியலிடப்படுகிறது. அதேபோல், முகவரி மாறி சென்றவர்கள், இறந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இப்பட்டியல்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம், வரும், 15ம் தேதி ஒப்படைக்கப்படும்