Disaster Alerts 09/11/2021

State: 
Tamil Nadu
Message: 
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும். பேரலை எச்சரிக்கை 09.11.21 முதல் 10.11.2021 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 7 - 9 அடி வரை வடதமிழகத்தில் கோடியக்கரை முதல் பழவற்காடு வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 75 -195 செ.மீ வேகத்தில் காணப்படும் மேலும் தென் தமிழகத்தில் கொளச்சல் முதல் கீழக்கரை வரை பேரலைகள் 8 - 10 அடி வரை எழக்கூடும். மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 44 -76 செ.மீ வேகத்தில் காணப்படும். காற்று எச்சரிக்கை 09.11.2021 முதல் 11.11.2021 வரை: தெற்கு ஆந்திர, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 09.11.2021, 10.11.2021: தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10.11.2021, 11.11.2021: தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
8
Message discription: 

Start Date & End Date: 
Tuesday, November 9, 2021 to Thursday, November 11, 2021