News Monday, August 9, 2021 - 11:39
Submitted by nagapattinam on Mon, 2021-08-09 11:39
Select District:
News Items:
Description:
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ், ஒரு சில விநாடிகளிலேயே வாட்ஸ் அப்பில் வந்து சேரும் வகையிலான புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு மூன்று எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், முதலில் 9013151515 என்ற எண்ணை தங்கள் கைபேசியில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் covid certificate என ஆங்கிலத்தில் டைப் செய்து அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும். இதையடுத்து, வாட்ஸ் அப்பில் வரும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்லை (OTP) பதிவு செய்ய வேண்டும். அவ்வளவுதான். ஒரு சில விநாடிகளுக்கு உள்ளாகவே சம்பந்தப்பட்ட நபரின் கரோனா தடுப்பூசி சான்றிதழ் அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்துவிடும். இதன் மூலம் கரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவது மிகவும் எளிமையாக்கும்.
Regional Description: