News Tuesday, March 7, 2017 - 11:01
Submitted by pondi on Tue, 2017-03-07 11:01
Select District:
News Items:
Description:
About 84 people in federal entitlement programs, are also linked with Aadhaar number. So far, 48 projects under the federal government's direct subsidy scheme linked to Aadhaar. More than 50 projects are soon to be linked with Aadhaar. 70 percent of children under the age of 5 and 18 have been given the Aadhaar number. The rest of the children who do not have Aadhaar number by June 30 will be provided by their schools. Federal food program also provides specialized training program on disability as the Federal Government has been forced to join the Aadhaar number. Aadhar number in the grant of the loan is necessary to obtain further education. Soon Backward Welfare centers, rehabilitation center for alcoholics, elderly care homes, including the locations of Aadhaar number is obligatory.
Regional Description:
மத்திய அரசின் சுமார் 84 மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட உள்ளன. இதுவரை மத்திய அரசின் நேரடி மானிய திட்டத்தின் கீழ் 48 திட்டங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 50 திட்டங்கள் ஆதாருடன் இணைக்கப்பட உள்ளன. 5 முதல் 18 வயதிற்கு உட்பட்ட 70 சதவீதம் குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாத மீதமுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளிகள் மூலம் ஜூன் 30ம் தேதிக்குள் வழங்கப்படும். மத்திய உணவு திட்டம் மட்டுமின்றி, மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர்வதற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் கல்வி கடன் பெறுவதில் மானியம் பெறுவதற்கும் ஆதார் எண் அவசியம். விரைவில் பிற்படுத்தப்பட்டோர் நல வாழ்வு மையங்கள், மது அடிமைகள் மறுவாழ்வு மையம், முதியோர் காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது.