News Tuesday, July 20, 2021 - 12:20
Submitted by nagapattinam on Tue, 2021-07-20 12:20
Select District:
News Items:
Description:
மீனவர் குழு விபத்துக் காப்புறுதித் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் மீன்பிடிப்பு மேற்கொள்ளும்போது விபத்தினால் மரணமடையும்/ முழு ஊனமடையும்/ மற்றும் காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.2,00,000/-மும் பகுதி ஊனமடையும் மீனவருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 1,00,000/-மும் காயமடையும் மீனவரின் மருத்துவச் செலவிற்காக ரூ.10,000/-மும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 01.06.2017 முதல் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (ஞஆளுக்ஷலு) திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவருக்கான ஆண்டு காப்புறுதி சந்தாத்தொகையான ரூ.12.00/- ஐ மத்திய மற்றும் மாநில அரசுகள் சமமாக செலுத்துகிறது. பயனாளி சந்தா தொகை செலுத்த தேவையில்லை.
உதவி பெறுவதற்குரிய தகுதிகள்:
அ) மீனவர் / மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகவும், தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் மீன்பிடித் தொழில் சார்ந்த பிரிவில் உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும். 18 முதல் 70 வயதிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.
மீன்பிடித்தொழில் / மீன்பிடி சார்ந்த தொழில் செய்பவராக இருத்தல் வேண்டும்.இ) உள்நாட்டு மீனவர் / மீனவ மகளிரும், மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள மீன்பிடி தொழில் சார்ந்த பணியில் உள்ள மீனவர்களும் இத்திட்டத்தில் பயனடையலாம். மேலும் தகவல் அறிய சம்மந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறலாம்.
Regional Description: