News Monday, July 5, 2021 - 13:50

Select District: 
News Items: 
Description: 
மனிதர்களால் தூக்கியெறியப்படும் குப்பைகள் தான் கடல் குப்பைகளில் அதிகபடியாக இருக்கின்றன. இவை கடலில் மிதக்கின்றன அல்லது அடித்து செல்லப்படுகின்றன. இந்த கடல் குப்பைகளில் பெரும்பங்கு வகிப்பது பிளாஸ்டிக் குப்பைகளாகும். கடல்களில் இருக்கும் பிளாஸ்டிக்கின் அளவு நூறு மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகமாய் இருக்கலாம் எனக் கடல் ஆராச்சியாளர்கள் கருதுகிறார்கள். தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கழிவின் மற்ற வடிவங்களும் கடலில் வந்து கலந்து கடல் உயிரினங்களுக்கும் மீன் வளத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. வாழ்விடம் இன்மை, பிராண வாயு பற்றாக்குறை மற்றும் உணவு ஆகிய பிரச்சினைகள் காரணமாக நீர்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. பொதுவாக பிளாஸ்டிக்கால் செய்யப்படுகிற மீன் வலைகளை மீனவர்கள் கடலில் விட்டுச் சென்று விடுகின்றனர் அல்லது தொலைத்து விடுகின்றனர். இதனால் இவற்றுக்குள் மீன்கள், டால்பின்கள், கடல் ஆமைகள், சுறாக்கள், கடல்பசுக்கள், கடல்பறவைகள், நண்டுகள் மற்றும் மற்ற உயிரினங்கள் மாட்டிக் கொண்டு, இந்த உயிரினங்களின் இயல்பான இயக்கம் பாதிக்கப்பட்டு அவை பட்டினியாலும் தொற்றுகளாலும் அவதியுறுகின்றன. எனவே இவற்றை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் கடலில் குப்பைகளை வீசாமல் இருப்பதே கடல் வளங்களுக்கும் மீனவர்களின் நலன்களுக்கும் நல்லது என்பதை அறிந்து விரைந்து செயலாற்ற வேண்டும்.
Regional Description: 