News Friday, March 3, 2017 - 10:53
Submitted by pondi on Fri, 2017-03-03 10:53
Select District:
News Items:
Description:
Price of non-subsidized cooking gas cylinder was increased to .86. This price increase will come into effect from today, immediately announced that the Petroleum Ministry. The price increase in the international market, unsubsidized price of cooking gas cylinder was increased .86 Petroleum Ministry explained. Given the change in the price of subsidized LPG cylinder has said that the Ministry of Petroleum. As the international market, the price of petrol and diesel to 15 days once the oil companies are adjusting.
Regional Description:
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துள்ளதால், மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.86 அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. சர்வதேச சந்தையின் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக வீடுகளில் உபயோகிக்கப்படும் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.86 அதிகரிக்கப்பட்டுள்ளது.