News Thursday, June 17, 2021 - 18:03
Submitted by nagapattinam on Thu, 2021-06-17 18:03
Select District:
News Items:
Description:
பொதுவாக ஒரு மீன் வளர்ச்சி அடைந்து ஒரு முறை இனப்பெருக்கம் செய்தபின் பிடிப்பதற்கு உகந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கடல் தொழில்களின் செலவுகளை ஈடு செய்வதற்காக சிறு மீன்கள் மற்றும் சினை நண்டுகள் அதிகளவில் பிடிக்கப்படுகின்றன, அதே சமயம் மீன்களின் வயோதிகம் காரணமாக அவற்றின் வளர்ச்சி வேகமாக குறைந்து இயற்கையாகவே மரணத்தை தழுவி இறக்க நேரிடுகிறது. எனவே வளர்ச்சியடைந்து இயற்கையாகவே இறந்து மடிவதற்கு முன்பு மீன்கள் பிடிக்கப்பட வேண்டும். அதேசமயம் மீன்பிடிப்பில் முதிர்ச்சி அடையும் முன்னரே பிடிக்கப்படுவது கவலை தரும் விஷயமாகும். மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் சினை நண்டுகள் அதிகம் கிடைக்கும், அவற்றில் சினையின் வளர்ச்சி மஞ்சள், ஆரஞ்சு, பிரவுன், கருப்பு நிறத்தில் மாறும், அந்த சமயங்களில் மீனவர்கள் வலையில் உயிருடன் கிடைக்கும் கருப்பு சினை நண்டுகளை கடலில் விட்டோம் எனில், அது பல லட்சம் நண்டுகள் வளர்வதற்கு முக்கிய பங்காக அமையும். எனவே இனிவரும் நாட்களில் நாம் இதை கடைபிடித்தோம் எனில், கடல் வளங்கள் செழிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
Regional Description: