News Tuesday, June 15, 2021 - 12:21
Submitted by nagapattinam on Tue, 2021-06-15 12:21
Select District:
News Items:
Description:
கொரோனா ஊரடங்கு காரணமாக மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மாசு குறைந்ததால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு 19 ஆயிரம் ஆமை முட்டைகள் மண்டபம் வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன. இவை பொரிப்பகத்தில் வைக்கப்பட்ட பின் பிறந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. அதே சமயம் கடல் பகுதியில் மீன்பிடித்தலும், கடற்கரைகளில் மக்கள் நடமாட்டமும் இல்லாததால் கடலில் மாசு, குறிப்பாக பிளாஸ்டிக் மாசு குறைந்துள்ளது. தற்போது மீனவர்கள் மத்தியில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படுவதால், கடலில் மீன் பிடிக்கும் போது வலைகளில் கடல் ஆமைகள் சிக்கினால் அவற்றை பாதுகாப்பாக கடலில் விடுவித்து விடுகின்றனர். இதை அனைவரும் கடைபிடித்தால், இன்றைய இந்த மாற்றமே நாளைய கடல் வளத்திற்கான ஏற்றமாக விளங்கும்.
Regional Description: