News Friday, June 11, 2021 - 13:23
Submitted by nagapattinam on Fri, 2021-06-11 13:23
Select District:
News Items:
Description:
தட்பவெப்ப நிலை மாற்றத்தால் கடல் நுண்னுயிர்களான பைட்டோபிளாங்க்டன் மற்றும் அதிகப்படியான வீட்டு மற்றும் தொழில்துறை கழிவுகளைக் கட்டுப்பாடில்லாமல் கடலுக்குள் கொட்டுவது போன்ற காரியங்களால் இன்று துருக்கி கடல்களில் சாம்பல் அல்லது பச்சை கசடு போன்ற ஒரு மெலிதான அடுக்கு உருவாகிவருகிறது. இதனை 'சீ ஸ்நாட்' என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இது பிசுபிசுப்பான, பழுப்பு மற்றும் நுரை நிறைந்த பொருளாகத் தோன்றும், இதனால் கடலில் உட்புகும் ஆக்சிஜன் தடுக்கப்பட்டு, கடலின் வெப்பநிலை இன்னும் அதிகரித்து கூடும். இதனால், கடலில் உள்ள உயிர் வளங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இது மனிதர்கள் ஏற்படுத்தியுள்ள நீர் மாசுபாடு பிரச்சினை காரணமாக இந்த கடல் சளி தற்பொழுது புது உருவம் எடுத்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் நமது கடற்பகுதிகளில் மாசு ஏற்படுத்தாத வகையில் நம்மிடையே மாற்றம் வந்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வுகாணமுடியும். இல்லையெனில் நமது கடற்பகுதுகளிலும் ‘சீ ஸ்நாட்’ பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்.
Regional Description: