News Thursday, May 13, 2021 - 14:02
Submitted by gujarat on Thu, 2021-05-13 14:02
Select District:
News Items:
Description:
சதுப்புநில காடுகள் இயற்கை பேரழிவுகளான சுனாமி மற்றும் வெள்ளம் போன்றவற்றிக்கு இயற்கை அரணாக உள்ளது. இவை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பல்லுயிரின் பெருக்கத்திற்கான வழியாக உள்ளது. மேலும் நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்பு சதுப்பு நிலா காடுகளுக்கு உண்டு. இதன் முக்கியத்துவத்தை அறிந்த இராமநாதாபுரம் வனத்துரையினர் 65 ஏக்கர் நிலப்பரப்பில் சதுப்பு நில காடுகளின் விதைகளை விதைத்துள்ளனர். அதுமட்டும்மில்லாமல் கடலின் தூய்மை காவலனான கடல் ஆமைகளின் 40,000 முட்டைகளை சேகரித்து, பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 95 விழுக்காடு உயிர்ப்பு திறனுடன் வெற்றிகரமாக கடலில் விடப்பட்டது. மேலும் கடல்வாழ்வின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆமைகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கடலுக்கு அடியில் உள்ள நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி உள்ளனர். இது கடல்வள உயிரினங்களின் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கும். எனவே இனி வரும் காலங்களில் நாம் ஒவ்வொருவரும், நம் பகுதிகளில் இது போன்ற செயல்களில் ஒன்றிணைத்து செயலாற்றி கடல் வளங்களை பாதுகாப்போம்.
Regional Description: