News Tuesday, May 11, 2021 - 11:39
Submitted by nagapattinam on Tue, 2021-05-11 11:39
Select District:
News Items:
Description:
அதிக வீரியம் உடைய உருமாறிய கொரோனா வைரசால், இந்தியாவின் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. வைரஸ் வேகமாகப் பரவ பரவ, அது உருமாறிக் கொண்டே இருக்கும். புதிய உருமாறிய கொரோனா வகைகள் தோன்றிக்கொண்டே இருக்கும். அப்படித் தோன்றும் உருமாறிய கொரோனா, நோயாளியின் மூச்சுக் காற்றில் இருந்து வெளியேறும் சிறு திரவ துகள்களும், நோய் பரப்பும் அபாயம் உள்ளவை. எனவே, நோயாளியிடம் இருந்து, 3 முதல் 6 அடி தூரத்தில் நிற்பது கூட தொற்றை ஏற்படுத்தக் கூடும். மேலும் கொரோனா வைரஸ் 15 நிமிடம் முதல் சிலமணி நேரம் வரை காற்றில் உயிர்ப்புடன் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமையம் பொதுமக்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற தவறினர். மிகப் பெரிய கூட்டங்களை நடத்தினர். கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதி, இந்தியர்கள் பலரும், மாஸ்க் அணிவதைத் தவிர்க்கத் தொடங்கினர். கொரோனா மீண்டும் அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்தது. சரியான நடைமுறைகளைப் பின்பற்றினால், கொரோனா பரவல் வேகத்தைக் குறைக்க முடியும். எனவே முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் கரோனா பரவலை தடுப்போம்.
Regional Description: