News Monday, May 3, 2021 - 12:41

Select District: 
News Items: 
Description: 
''கடல் வாழ் உயிரினங்களின் புகழிடமாகவும், இயற்கை சமன்பாடு மாறாமல் இருப்பதற்கு உதாரணமாக இருப்பது பவளப்பாறைகள். லட்சத்தீவுகள் மற்றும் மாலதீவுகள் போன்ற ஆழமற்ற கடல் பகுதிகளில் பவளப்பாறைகள் மற்றும் பவளத்திட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இவை கடலில் தடுப்பு போல செயல்பட்டு அலையின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நம் கடற்கரைகளைப் பாதுகாக்கின்றன. ஆழம் குறைவான பகுதிக்கு அலைகள் வரும்போது பவளத்திட்டுகள் மீது பட்டு அவை உடைந்து சிதறுகின்றன. இதன் மூலம் அலைகள் வலுவிழக்கின்றன. பவளத்திட்டுகள், பவளப் பாறைகள் இல்லையென்றால் நமது கடற்கரையின் பெரும்பகுதி அரிக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கிவிடும். நமது தீவுகள் குறுகிக் குறுகி சிறியதாகிவிடும். பவளத்திட்டுகள்தான் இவை அனைத்தையும் பாதுகாக்கின்றன. அதே சமயம் வெப்ப மண்டல நிகழ்வுகளிலிருந்து பவளப்பாறைகள் தங்களை பாதுகாத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு வேகமாக வளருகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலம் விஞ்ஞானிகள் அறிந்திருப்பது, வெப்ப மாற்றத்தினால் வேகமாக வளரும் பவளப்பாறைகளின் எண்ணிக்கை குறைவதும், மெதுவாக வளரும் பவளப்பாறைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான். இந்த அழிவுக்கு முக்கியக் காரணங்களாக இருப்பது பிளாஸ்டிக் மற்றும் கடல் நீர் சூடேற்றம் என்று கூறப்படுகின்றன. ஆனால், இவை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும் கடல் வளத்தைப் பாதுகாக்கவும் விஞ்ஞானிகள் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கி கடலுக்கடியில் வைத்ததால் தற்போது படிப்படியாக அவை எண்ணிக்கையில் உயர்ந்து வருகின்றன.
Regional Description: 