News Sunday, February 19, 2017 - 11:43
Submitted by nagapattinam on Sun, 2017-02-19 11:43
Select District:
News Items:
Description:
Anchovies
It applies more accurately to reduce spicy anchovy mustard Leopard
Anchovies are one of the types of fish catch. Because Mercury is so tiny that a decrease in the amount of anchovies extensively. Thus the fish Children, pregnant women cappitalanka all.
Bone growth, tooth and the fish is very good. The potassium content of the book is so good that the heart and brain. Potassium in the body that do not join it unless he can avoid the fish. Nayac of vitamin B 12, vitamin B 6 as the heart of the company have introduced special nutrients anchovy fish. Only 12 percent of the iron in our body needs daily. 20 g anchovy eats us this 12 per cent of iron availability of medicines prediction with our skin, beauty of the anchovy minil the vitamin content is very important, and these high-protein, low fat, and calories, the ratio is less than the weight to be less it helps.Guys do not have to know any more about anchovies anchovy catch a grip.Any other information Please contact us our MSSRF Help line numbers 9381442312/9381442311
Regional Description:
நெத்திலி மீன் ஒரு நெத்தியடி மீன்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது நெத்திலிக்கு அது சாலப் பொருந்தும்
மீன் வகைகயில் ஒரு ஸ்பெஷல் மீன் நெத்திலி மீன் தான். இந்த நெத்திலி மீன்களில் விட்டமின் ஏ இருப்பது மிகவும் சிறந்தது 100 கிராம் நெத்திலி நீங்கள் சாப்பிட்டால் 50,000 யூனிட் அளவுக்கு விட்டமின் ஏ கிடைக்கும் நம்ம எல்லார்க்கும் தெரியும் விட்டமின் ஏ கண்பார்வைக்கு மிகவும் சாலச்சிறந்தது. இதுமட்டுமல்லது நெத்திலி மீன்கள் குட்டியாக இருப்பதால் மெர்குரி அளவு ரொம்ப குறைவு. இதனால் இந்த மீனை குழந்தைகள் , கர்ப்பிணி பெண்கள் என எல்லாரும் சாப்பிடலாங்க.
எலும்பு வளர்ச்சிக்கும், பல்லுக்கும் இந்த மீன் ரொம்ப நல்லது. இதிலுள்ள பொட்டாசியம் சத்து இதயத்திற்கும் மூளைக்கும் ரொம்ப நல்லது. பொட்டாசியம் சத்து உடலில் சேரக் கூடாது என்று சொல்லி இருந்தால் மட்டுமே இந்த மீனை தவிர்க்கலாம். செலீனியம் சத்து இதிலுள்ள இன்னொரு சத்து இது இதய நோய் வராமல் தடுப்பத்துடன் ,இரத்த குழாயின் ஆரோக்கியத்தை காக்கவும் வலிப்பு போன்ற நோய்களிலிருந்து விடுவிக்கவும் இது மிகவும் சிறந்த ஒன்று .ஆஸ்டியோபோராசிஸ் என்ற கொடிய எலும்பு முறிவு நோய் .கேன்சர் போன்றவற்றை தடுக்கும் வல்லமையும் இந்த குட்டி மீனுக்கு உண்டு. நயாசின், விட்டமின் பி12 , விட்டமின் பி6 போன்ற ஸ்பெஷல் சத்துகள் நெத்திலி மீனை இதயத் தோழனாக அறிமுகம் செய்துள்ளன. தினமும் நமது உடலுக்கு 12 சதவீதம் இரும்பு சத்து தேவைப்படுகிறது. 20 கிராம் நெத்திலி சாப்பிட்டால் நமக்கு இந்த 12 சதவீதம் இரும்பு சத்து கிடைக்கும் என்பது மருந்துவர்களின் கணிப்பு .நமது மேனி எழிலுக்கு நெத்திலி மீனிலுள்ள விட்டமின் சத்து மிகவும் முக்கியமானது, மேலும் இதிலுள்ள அதிக புரோட்டீன், குறைவான கொழுப்பு , மற்றும் கலோரி எனும் விகிதம் குறைவாக இருப்பதால் உடல் எடையும் குறைவாக இருக்க இது உதவுகிறது.