News Tuesday, January 19, 2021 - 15:14
Submitted by nagapattinam on Tue, 2021-01-19 15:14
Select District:
News Items:
Regional Description:
கடலின் தூய்மை காவலன்….
கடல் ஆமைகள் கடலில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பயணம் செய்யும் ஆற்றலை பெற்ற கடல் ஆமைகள், தங்கள் இன வளர்ச்சிக்கு கடற்கரையை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. கடலாமைகள் வளர்ந்து பெரிதானாலும் கூட அதன் பிறந்த இடத்தை மறப்பதில்லை. இனப்பெருக்கத்திற்கு தயாரான ஒரு பெண் ஆமை மீண்டும் தான் பிறந்த அதே கடற்கரை பரப்பிற்க்கு வந்து தான் முட்டையிடுகிறது. கடல்ஆமைகள் உணவுக்காகவும், முட்டையிடுதளுக்காகவும் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடம் பெயர்ந்து செல்லக் கூடியவை.
பிறப்பிடத்தை மறவாத பெண் ஆமைகளுக்கு !
கடற்கரையில் இருப்பிடம் தரவேண்டாமா !