News Sunday, February 12, 2017 - 06:11

Select District: 
News Items: 
Description: 
Indian Space Research Organisation (ISRO) satellites, launching them to evuvat pieselvi, jieselvi Is preparing for the two rockets. These rockets to launch satellites made by the domestic and overseas activator varukiratukatanta since 1994 until the year 2016, 121 satellites by ISRO to launch several rockets has paid off. The United States, Israel, Kazakhstan, the Netherlands, Switzerland, of all nationalities, including 103 satellites with 664 kg, 714 kg belonging to our country kartto Chad-2 satellites for meteorology injected
Regional Description: 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது.கடந்த 1994–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. இதில் 21 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களுக்கு சொந்தமான 79 வெளிநாட்டு செயற்கைகோள்களும், உள்நாட்டைச் சேர்ந்த 42 செயற்கைகோள்களும் அடங்கும்.இதனை தொடர்ந்து தற்போது 104 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 664 கிலோ எடை கொண்ட 103 செயற்கைகோள்களுடன், 714 கிலோ எடை கொண்ட நம் நாட்டுக்கு சொந்தமான கார்ட்டோ சாட்–2 என்ற வானிலை ஆய்வுக்கான செயற்கைகோள்களும் செலுத்தப்படுகிறது.