You are here
Disaster Alerts 22/11/2020
State:
Tamil Nadu
Message:
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக மற்றும் புதுச்சேரி கடல்பகுதியில் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே வரும் 25 ஆம் தேதி கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதன் காரணமாக வடக்கு மற்றும் தெற்கு தமிழக கடலோர பகுதிகளில் பேரலை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.
பேரலை எச்சரிக்கை
வட தமிழகம் /புதுச்சேரி
22.11.2020 மாலை 5.30 மணி முதல் 24.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 6 அடி முதல் 11 அடி வரை கோடியக்கரை முதல் பழவேற்காடு வட தமிழக கடல் பகுதியில் எழக்கூடும். மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் விநாடிக்கு 43-62 செ .மீ வேகத்தில் காணப்படும்.
தென் தமிழகம்
22.11.2020 மாலை 5.30 மணி முதல் 24.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் 7 அடி முதல் 10 அடி வரை குளச்சல் முதல் தனுசுகோடி கடல் பகுதியில் எழக்கூடும். மேலும் கடல் மேல்மட்ட நீரோட்டம் விநாடிக்கு 43-62 செ .மீ வேகத்தில் காணப்படும்.
பலத்த காற்று எச்சரிக்கை
22.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வீசக்கூடும். இது 23.11.2020 அன்று மேலும் அதிகரித்து மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல், தமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் வீசக்கூடும். 24.11.2020 - 25.11.2020 தேதிகளில் மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் வீசக்கூடும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை
கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே இன்று கரை திரும்பும் மாறும், வரும் 25 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
9
Message discription:

Start Date & End Date:
Sunday, November 22, 2020 to Wednesday, November 25, 2020