News Saturday, August 8, 2020 - 21:58
Submitted by pondi on Sat, 2020-08-08 21:58
Select District:
News Items:
Description:
பிரதம மந்திரி-கிசான் திட்டத்தின் கீழ் (Kissan Credit Card) கடன் பெற விரும்பும் மீனவ மக்களின் கவனத்திற்கு
பிரதம மந்திரி-கிசான் திட்டத்தின் கீழ், மீன் வியாபாரம் செய்யும் மீனவ மகளிருக்கு ரூ.33,000/-, சைக்கிள் மூலம் மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.33,000/-, கருவாடு வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.35,000/-, இரு சக்கர வாகனத்தில் குளிர்சாதன பெட்டியை வைத்து மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு ரூ.1,15,000மும், வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பயனாளிகள் ஒரு ஆண்டிற்குள் அவர்கள் வாங்கிய கடனை செலுத்தினால் 4% வட்டியும், ஒரு வருடத்திற்கு மேல் கடன் தொகையை செலுத்தினால் 7% வட்டியும் செலுத்த வேண்டும்.
இக்கடன் திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் மீனவ மக்கள், இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடன் விண்ணப்பத்தை பெறுவதற்காக இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம். இந்தக் கடனை பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் யாராவது அணுகினால், அவர்களைப் பற்றிய தகவலை தங்கள் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்கவும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவ மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Regional Description: