News Tuesday, June 9, 2020 - 10:11
Submitted by pondi on Tue, 2020-06-09 10:11
Select District:
News Items:
Description:
அறிவியல் முறையிலான மீன்பிடிப்பு
உபயோகப்படுத்தும் படகுகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெறப்படும் மீனின் அளவும் மாறுபடும். மிக அதிகமாக படகுகள் உபயோகிக்கப்படும் போது பிடிக்கப்படும் மீனின் அளவு குறையும். மீன்வளம் பாதிக்கக் கூடும். குறிப்பிட்ட அளவு மீன்பிடிப் படகுகளை உபயோகப்படுத்தும்பொழுது மீன்வளம் அழியாமல் தொடர்ந்து கிடைக்க வழிவகையுள்ளது. அந்த மீன்பிடிப்பை அதிகளவு வளங்குன்றா மீன்பிடிப்பு என்று கூறுகிறோம். மீன் ஆராய்ச்சியாளர்கள் இந்த அளவைக் கணக்கிட்டு அதற்குத் தக்கவாறு மீன்பிடி மேலாண் முறைகளை வரையறுக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மீன்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக கிடைக்குமாறு பார்த்துக் கொள்வோமானால், மீன்வளம் வளம்குன்றா வகையில் இருக்கும். அந்த மீன் இருப்பை மீன்வளங்குன்றாமலிருக்கத் தேவையான மீன் இருப்பு என்கிறோம். இம்மீனிருப்பு குறையும் பொழுது பிடிக்கப்படும் மீனின் அளவு குறையும்.
Regional Description: