News Tuesday, May 26, 2020 - 11:24
Submitted by nagapattinam on Tue, 2020-05-26 11:24
Select District:
News Items:
Regional Description:
இந்தியா - மத்திய அரசு வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அனைத்து படகுகளுக்கும் மீன்பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது. மார்ச் 24 முதல் கொரோனாவினால் ஏற்பட்ட மீன்பிடி தடையை கருத்தில் கொண்டு இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி தடை காலம் கிழக்கு கடற்கரை மாநிலங்களுக்கு ( தமிழ் நாடு , புதுச்சேரி , ஆந்திரா , ஒடிசா , மேற்குவங்கம் ) இரண்டு வாரம் குறைக்கப்பட்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . மேலும் மேற்கு கடற்கரை மாநிலங்களுக்கு மீன் பிடி தடைக்காலத்தை ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை குறைத்துள்ளது . மேலும் இந்த தளர்வு இந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மீன்வளத்துறையுடன் தொடர்பு கொண்டு மற்ற விளக்கங்களை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்