News Friday, January 27, 2017 - 10:50
Submitted by nagarcoil on Fri, 2017-01-27 10:50
Select District:
News Items:
Description:
Importance of Coral reef
Regional Description:
பவளப் பாறைகள் பவளப் பாறைகள், சுண்ணாம்புக் கற்களாலான உயிரினமாக இருந்தாலும் இவை மற்ற நுண்ணுயிரிகளை உண்டு உயிர் வாழ்கின்றன. பவளப் பாறைகளை ஒரு வகையான விலங்கு அல்லது தாவரம் என்றுகூடச் சொல்லலாம். இவற்றிலுள்ள பாலிப்ஸ் என்ற உயிரினம் இறந்துவிட்டால் இந்தப் பவளப் பாறைகளும் இறந்துவிடும்இந்தப் பாலிப்ஸ் உயிரினங்கள், கடலிலுள்ள சுண்ணாம்பை எடுத்துக்கொண்டு இவற்றுக்குக் கடினத் தன்மையையும் பல வகையிலான தோற்றங்களையும் தருகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் பிற சிறிய மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன.இந்தியாவில் மட்டும் 200 வகையான பவளப் பாறைகள் உள்ளன. இவை கடினமானவை, மிருதுவானவை என்று இரண்டு வகைப்படும். பல வடிவங்களிலும் காணப்படும். மனித மூளை வடிவம், மான்கொம்பு வடிவம், மேஜை மற்றும் தட்டு வடிவம் போன்ற வடிவங்களிலும் இருக்கின்றன.